Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனோஜனுக்காக ஜனாதிபதி மற்றும் சவூதி மன்னருக்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கோரிக்கை மனு

செப்டம்பர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மனிதநேய அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நேரடியாகவும், சவூதி மன்னருக்கு இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் ஊடாகவும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கோரிக்கை மனு ஒன்றை இன்று (25) கையளித்துள்ளனர்.

இது தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவசர மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

“சிவராசா அனோஜன் செய்த தவறை அல்லது அவர் தெரிவித்த அவமதிப்பான கருத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்தவோ அல்லது ஆதரிக்கவோ முடியாது. இருப்பினும், இந்தச் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒன்றல்ல. சமூக வலைத்தளத்தில் இரு நபர்களிடையே ஏற்பட்ட உணர்ச்சிவசப்பட்ட விவாதத்தின்போது எதிர்பாராதவிதமாக உருவான ஒரு கருத்தே இதுவாகும்.

தான் செய்த தவறை உடனடியாக உணர்ந்த அவர், அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டதுடன், தொடர்ந்து தன் தவறுக்காக ஆழந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். அறியாமையினாலும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் பேசப்பட்ட ஒரு வார்த்தைக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அரசு கொள்கைகளைப் படியுங்கள்

இஸ்லாமிய மார்க்கம் கருணையையும் மன்னிப்பையும் மிக உயர்ந்த நற்பண்புகளாகப் போதிக்கிறது.

‘பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள்; வானத்தில் உள்ள அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவான்’ என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழிக்கேற்ப, சவூதி மன்னரும் அரசாங்கமும் இஸ்லாத்தின் கருணை அடிப்படையில் இவருக்குப் பொது மன்னிப்பு வழங்கவேண்டும்.

வறுமைச் சூழலில் வாழும் அவரது குடும்பத்தின் நிலையைக் கருத்தில் கொண்டும், தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரியுள்ளதைக் கவனத்தில் கொண்டும், இந்த விவகாரத்தை உயர் மதத் தலைவர்கள் மற்றும் நீதித்துறையின் கவனத்திற்குக் கொண்டுசென்று, அவரது மரண தண்டனையை இரத்து செய்ய ஆவன செய்யவேண்டும்” என அந்த மனுவில் உருக்கமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

சவூதி அரேபியாவில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்து – இரு பணியாளர்கள் பலி

அக்டோபர் 18, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

முதல்நாள் ஆட்டத்தில் தடுமாறிய இங்கிலாந்து அணி

ஆகஸ்ட் 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

3,500க்கும் அதிகமான தரமற்ற ஹெல்மட்கள் பறிமுதல்!

ஜூலை 30, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

நீரில் மூழ்கிய சிறுவனை தேடும் பணிகள் தொடர்கின்றன!

ஜூலை 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube