Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு வெள்ளை மாளிகையில் விருந்து!

செப்டம்பர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (24) இரவு வெள்ளை மாளிகையில் அரசுமுறை விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விருந்தின்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் வழங்கிய வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ஷி ஜின்பிங் நன்றி தெரிவித்துள்ளார்.

சீன மக்கள் தற்போது பாரம்பரிய, மத்திய இலையுதிர் விழாவைக் கொண்டாடி வரும் நிலையில், குடும்பங்கள் ஒன்றுகூடும் இந்தத் திருநாளை முன்னிட்டு அமெரிக்க மக்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஷி ஜின்பிங் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அவரது மனைவி பெங் லியுவான் மற்றும் சீனப் பிரதிநிதிகள் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகருக்கு மேற்கொண்ட பயணத்தின்போது சீன மக்களிடமிருந்து தமக்கு கிடைத்த பிரமாண்டமான வரவேற்பை நினைவுகூர்ந்த ட்ரம்ப், பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஷி ஜின்பிங் வொஷிங்டனுக்கு வருகை தந்துள்ள நிலையில், அதற்கு இணையான விருந்தோம்பலை வழங்க தாம் எதிர்பார்த்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஷி ஜின்பிங்கின் இந்த அரசுமுறைப் பயணம், அமெரிக்கா – சீனா உறவுகளில் இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கான முக்கிய சந்தர்ப்பமாகக் கருதப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

உடபுசல்லாவை சிவகாந்தனுக்கு இலங்கை கரப்பந்தாட்ட தேசிய அணியில் வாய்ப்பு!

ஜூலை 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முதல் மாவீரன் தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது ஆண்டு நினைவு நாள்!

ஜூன் 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன்!

ஜூன் 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 மீற்றர் வரை உயர்ந்த கடல் படுகை!

ஜூன் 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube