Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஆண்களும் இல்லத்தரசர்களாக இருக்கலாம் – சென்னை உயர் நீதிமன்றம்

புரட்டாதி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

திருமணத்திற்குப் பின்னர் குடும்பப் பொறுப்புகளை பெண்கள் மட்டுமே ஏற்க வேண்டும் என்ற பாரம்பரிய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

ஆண்களும் வீட்டையும் குடும்பத்தையும் கவனிக்கும் ‘இல்லத்தரசர்கள்’ அல்லது ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்களாக இருக்க முடியும் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நடைமுறை சமூகத்தில் இயல்பான ஒன்றாக மாறினால், திருமணம் மற்றும் குடும்ப அமைப்பைப் பாதுகாப்பதற்கு அது உதவக்கூடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த இருதய நோய் மருத்துவர் ஒருவருக்கும், தேனியைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவருக்கும் இடையிலான திருமண வழக்கை விசாரித்தபோதே நீதிமன்றம் இந்தக் கருத்துகளைத் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தம்பதியினர் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டதுடன், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கணவர் விவாகரத்து கோரியும், மனைவி திருமண உறவைத் தொடர்வதற்கான சட்ட நிவாரணம் கோரியும் தேனி குடும்பநல நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். எனினும், இரு மனுக்களையும் குடும்பநல நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இதனை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

வழக்கு விசாரணையின்போது, பாரம்பரியமாக குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டும் பொறுப்பு கணவரிடமும், வீட்டைப் பராமரிக்கும் பொறுப்பு மனைவியிடமும் இருந்ததாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

எனினும், காலப்போக்கில் இந்தப் பாரம்பரியப் பங்குகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பெண்கள் அதிகளவில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், குடும்பப் பொறுப்புகளை கணவன் மற்றும் மனைவி இருவரும் பகிர்ந்துகொள்ளும் அணுகுமுறை அவசியம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், பெண்கள் இல்லத்தரசிகளாக இருக்க முடியும் என்றால், ஆண்களும் இல்லத்தரசர்களாக இருக்க முடியும் என்றும், ‘இல்லப் பராமரிப்பாளர்’ என்ற பங்கு பாலின வேறுபாடற்றது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு மீதான பரிசீலனை நிறைவு: உத்தரவு செப்டம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

ஆவணி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கு : உடல்கள் கிடைக்காததால் மக்கள் கவலை

புரட்டாதி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

93 சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொருளாதார வளர்ச்சியை 8% வரை உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு

ஆடி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube