மொனராகலையில் இருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்து ஒன்று, புத்தல – மஹகொடய பகுதியில் இன்று (11) செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.55 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
பேருந்து வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் பேருந்து சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற விதம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
