Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்வு

செப்டம்பர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின்படி, இதுவரை மொத்தம் 99,634 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நோயாளர் இறப்பு விகிதம் 0.077% ஆகப் பதிவாகியுள்ளது.

மொத்த நோயாளர்களில் 52.53% ஆனோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 52,340 ஆகும்.

மாவட்ட ரீதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,136 ஆகும்.

இதற்கு மேலதிகமாக கொழும்பு: 19,569 நோயாளர்கள், கண்டி: 7,547 நோயாளர்கள்,களுத்துறை: 6,339 நோயாளர்கள், மாத்தறை: 6,273 நோயாளர்கள் மாவட்ட ரீதியில் டெங்கு நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். Geographic Reference

அதேவேளை, ஜூலை மாதத்திலேயே அதிக அளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்த மாதத்தில் மாத்திரம் 29,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஆகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். செப்டம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4,144 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது 37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

“வலுக்கட்டாயமாக மக்களைப் பணிய வைக்க முடியாது” – ஈரான் ஜனாதிபதி

செப்டம்பர் 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த மசாஜ் நிலைய ஊழியர் கைது

மே 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி மின்கம்பத்தில் மோதி விபத்து – மூவர் படுகாயம்

ஆகஸ்ட் 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மரண தண்டனையிலிருந்து தப்பிய இலங்கைத் தமிழர் அனோஜன்! நடந்தது என்ன?

அக்டோபர் 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube