Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

லண்டனில் சார் விபத்தில் இலங்கை சிறுமி உயிரிழப்பு

புரட்டாதி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் உள்ள ஹைஃகேட் பகுதியில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த போதே கார் மோதியதில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மெலிசா பிரேமரத்ன என்ற 16 வயதுடைய சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 24 ஆம் திகதி வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக இலண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 ஆம் திகதி காலை 8:13 மணியளவில், வடக்கு இலண்டன் ஹைஃகேட்டின் ‘நோர்த் ரோட்’ பகுதியில் பாடசலைக்குச் சென்றுகொண்டிருந்த போதே மெலிசா கார் மோதி விபத்திற்குள்ளாகினார்.

அவசர மருத்துவ சேவையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், மெலிசா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெலிசா பிரேமரத்ன பிரபல ஹைகேட் பாடசாலையின் 12 ஆம் ஆண்டு மாணவி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த 68 வயதுடைய நபர், கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய வாகனம் பிரபல ‘அடிசன் லீ’ என்ற தனியார் டாக்ஸி நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பதுடன், பொலிஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெலிசாவின் மறைவு குறித்து அஞ்சலி செலுத்தியுள்ள அவரது குடும்பத்தினர், “மெலிசா எங்கள் வாழ்வின் வெளிச்சமாக இருந்தாள்; அவளது கருணை, அன்பான குணம் மற்றும் விளையாட்டுத்தனம் எங்களை விட்டு என்றும் பிரியாது” என உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான தகவல்கள்,சிசிரிவி காட்சிகள் அல்லது டேஷ்கேம் பதிவுகள் வைத்திருப்போர் உடனடியாகத் தமக்கு வழங்குமாறு இலண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் மாணவர் போராட்டம் தீவிரம்!

ஆடி 20, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி அபார வெற்றி!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீட்டு பரணிலிருந்து 3 வயது குழந்தை மீது விழுந்த தந்தை – குழந்தை உயிரிழப்பு!

வைகாசி 17, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

பிற நிறுவனங்களின் இணையதளங்களுக்குள் ஊடுருவிய கூகுளின் ‘ஜெமினி’ AI

புரட்டாதி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube