பத்தேகம – ஹல்பதொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
