Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பத்தேகம துப்பாக்கிச்சூட்டு பின்னணியில் ‘கரந்தெனிய சுத்தா’ – பொலிஸார் தீவிர விசாரணை

புரட்டாதி 27, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

பத்தேகம ,ஹல்பதொட்ட பகுதியில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவரும், அவர் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதியும் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாந்தோட்டையைச் சேர்ந்த ‘களு நோனா’ என்று அழைக்கப்படும் சுசிதா இரோஷனி என்பவரும், முச்சக்கர வண்டிச் சாரதியான அம்பலாந்தோட்டையைச் சேர்ந்த லலித் சுசந்த டி சில்வா என்பவருமே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரும் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கரந்தெனிய சுத்தா’ எனப்படும் சோபன ஹந்தி ஜயலத் டி சில்வாவின் குழுவைச்சேர்ந்வர்களாலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த ‘களு நோனா’ என்பவர், ‘லொகுபெட்டி’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லந்துவாஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வாவின் தரப்பைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த ‘லொகுபெட்டி’ என்பவரே கடந்த 2024ஆம் ஆண்டு அத்துருகிரியவில் இடம்பெற்ற கிளப் வசந்தவின் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டு, கடந்த மே மாதம் வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவராவார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக மோட்டார் சைக்கிளில் நால்வர் அடங்கிய குழுவினர் வந்துள்ளதுடன், அவர்களிடம் இருந்த இரண்டு T-56 ரக துப்பாக்கிகளில் ஒன்றைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலின் பின்னர் சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் போது பல தடவைகள் வேறுபட்ட உந்துருளிகளுக்கு மாறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த ‘களு நோனா’வின் தாயாரான டி. என். ஜி. மல்லிகா என்பவர் தற்போது காலி கராப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்த பெண், பத்தேகமவில் அமைந்துள்ள காலி குற்றத் தடுப்புப் பிரிவில் கையொப்பமிட்டு திரும்பிக் கொண்டிருந்த போதே, அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் CCTV கெமராவில் பதிவாகியுள்ள காணொளியை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 3 சிறைக்காவலர்கள் கைது!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழையுடனான காலநிலை தொடரும்!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஆவணி 4, 2026
இலங்கை

நீர்கொழும்பு சிறை மோதல்; காயமடைந்த அதிகாரிகளை அமைச்சர் சந்திப்பு!

ஆடி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube