பொலன்னறுவை – பலுகசுதமன பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் இரகசியமாக நிலம் தோண்டிக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் சனிக்கிழமை(26) கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினை அடுத்து, குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து புதையல் தோண்டப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
