Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கு கடற்கரைப் பகுதியில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி கண்டெடுப்பு

புரட்டாதி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

வடக்கு கடற்கரைப் பகுதியில் அண்மைக்கால வரலாற்றில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி யாழ்ப்பாணம், மாதகல், குசுமண்துறை கடற்கரைப் பகுதியில் இன்று (27) கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அக்குரேகொட இராணுவத் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

May be an image of baguette and text

அத்துடன், கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகுதியின் பெறுமதி சுமார் 1.5 பில்லியன் ரூபாய் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் 35 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 45 கிலோகிராம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் அடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கடற்படை மற்றும் காவல்துறையினரால் 1 கிலோகிராம் பொதிகள் கைப்பற்றப்பட்டிருந்த போதிலும், வடக்குக் கடற்கரைப் பகுதியில் 5 கிலோகிராம் கொண்ட பொதிகளாக போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No photo description available.

இந்த போதைப்பொருள் தொகுதி வடக்கின் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கைக்குச் சென்றிருந்தால் பெரும் பேரழிவு ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும், வடக்கு என்றோ தெற்கு என்றோ பாகுபாடின்றி இலங்கை மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாகக் கருதி தற்போதைய அரசாங்கம் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

“வீதிதோறும் மின்விளக்கு” திட்டம் சக்திபுரத்தில் ஆரம்பம்

புரட்டாதி 1, 2026
இலங்கைவானிலை

மகாவலி ஆற்றுப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

3,000 மாணவத் தாதியர்களை சேவையில் இணைக்கத் திட்டம்!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியாவில் உணவு ஒவ்வாமையினால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube