Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறையில் மீன் விற்பனையில் மோசடி – மக்கள் விசனம்

புரட்டாதி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அம்பாறையில், சந்தைகளிலும் வீதியோரங்களிலும் மீன் விற்பனையின் போது, மீன்களின் எடையைச் செயற்கையாக அதிகரிப்பதற்காகவும் அவற்றின் பழமையை மறைப்பதற்காகவும் மணல் தூவி விற்கும் மோசடிச் செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

குறித்த மோசடி தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மீன்களின் செதில்கள், வாய் மற்றும் செவுள்களுக்குள் நுண் மணல் அல்லது மணல் தூள்களைப் புகுத்துவதன் மூலம் மீனின் நிகர எடை செயற்கையாக அதிகமாக்கப்படுகிறது. இதன் மூலம் நுகர்வோர் குறைந்த அளவு மீனுக்கு அதிக பணம் செலுத்தி ஏமாற்றப்படுகின்றனர்.அத்துடன் நாள்பட்ட மீன்களின் வழுவழுப்புத் தன்மையையும், அவை அழுகும் போது ஏற்படும் வெளிப்புற மாற்றங்களையும் மறைத்து, புதிய மீன் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவே இத்தகைய ஏமாற்று வேலைகளில் சில வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, சந்தைகளில் மீன் கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுவது அவசியம் என்றும், இவ்வாறான மணல் கலப்பட அல்லது ஏமாற்று வியாபாரங்களில் ஈடுபடும் வர்த்தகர்கள் பற்றி அருகிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கோ அல்லது நுகர்வோர் அதிகாரசபைக்கோ உடனடியாக முறைப்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

பெண் வைத்தியருக்கு அவதூறு பரப்ப தடை: அர்ச்சுனா எம்.பி. தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவு

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான தானியங்கி கட்டண முறைமை இந்தவருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும்!

சித்திரை 24, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ராகுல் காந்தி கைதுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!

ஆடி 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நியூ மெக்சிகோவின் பெயரை ‘நியூ அமெரிக்கா’ என மாற்ற டிரம்ப் யோசனை!

புரட்டாதி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube