தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு வந்த மியன்மார் நாட்டைச் சேர்ந்த 22 வயதுடைய பயணி ஒருவரிடமிருந்து, 46.46 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று (21) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த பயணி, போதைப்பொருளை மூன்று பொதிகளில் மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பயணப் பைகளில் ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 646 கிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
