நேபாளத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரையில் இடம்பெற்ற அனர்தங்களினால் 11 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நேபாள வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நேபாளத்திலுள்ள 77 மாவட்டங்களில் 49 மாவட்டங்களுக்கு இந்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து நீடிப்பதால் அந்த நாட்டின் முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
