Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தண்ணீர் போத்தலுக்கு அதிக விலையா? உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!

#குடிநீர்போத்தல் #அதிகவிலை #உணவகம் #அபராதம் #ரூபாய்10இலட்சம் #நுகர்வோர்உரிமை #விலைக்கட்டுப்பாடு #நுகர்வோர் #இலங்கைசெய்திகள் #செய்திகள் #BreakingNews #SriLankaNews #WaterBottle #ConsumerRights

ஐப்பசி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்த பம்பலப்பிட்டிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த உணவகத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தில் குறித்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச சில்லறை விலை தொடர்பில் வெளியிடப்பட்ட 2492/29 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 96ஆம் இலக்க கட்டளையின்படி, 500 முதல் 999 மில்லிலீற்றர் வரையிலான போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை 80 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த உணவகத்தில் 500 மில்லிலீற்றர் குடிநீர் போத்தல், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையான 80 ரூபாயை விட 20 ரூபாய் அதிகமாக, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள பொருட்களை, உணவகங்கள் அல்லது வேறு எந்தவொரு வர்த்தக நிலையங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு சிறையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

ஆடி 7, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

வவுனியாவில் மாணவர் பாதுகாப்புக்கு புதிய கட்டுப்பாடு!

ஆடி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கை – ட்ரம்ப் எச்சரிக்கை

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிராமிய வங்கி கொள்ளை – மூவர்  தங்க நகைகளுடன் தப்பிச் சென்றனர்!

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube