திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர் ஜேசன் விஜயின் ‘சிக்மா’ திரைப்பட ப்ரோமோஷன் பணிகள் சுவாரசியமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னணி நடிகை ஜோதிகா படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், ‘சிக்மா’ படத்தின் ப்ரோமோஷன் பணிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
மேலும், “பக்குவமான மற்றும் இயல்பான இளைஞராக வளர்ந்துள்ளீர்கள்; உங்களின் உழைப்பிற்கு இந்த வெற்றி நிச்சயமாகத் தகுதியானது” எனப் பாராட்டியுள்ளார்.
பெற்றோருக்குச் சிறந்த மகனாக விளங்கும் உங்களின் திரைப்பட வெளியீடு (Release) மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
நடிகை ஜோதிகாவின் இந்த நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
