அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட கப்பல்களுக்கு விநியோகங்கள் அல்லது சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதிக்கும் இரண்டாம் நிலைத்தடைகள், உலகளாவிய கொள்கை சார்ந்த நடவடிக்கையே தவிர இலங்கையைக் இலக்கு வைத்தது அல்ல என்று வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
தடை விதிக்கப்பட்ட கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், எமது நிதி உதவிகள், வரிச்சலுகைகள் ஆகியவற்றுக்கான அணுகலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க எச்சரித்துள்ளது.
குறித்த அறிவிப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகமும் ஊடகப் பேச்சாளருமான துஷார ரொட்ரிகோ தெரிவிக்கையில்,
அமெரிக்காவின் அறிவிப்புக்களும், நடவடிக்கைகளும் உலகளாவிய தடைக்கொள்கையின் பகுதியாகும். குறிப்பாக இலங்கையை இலக்கு வைத்து அந்த அறிவிப்பு மேற்கொள்ளப்படவில்லை.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் சூழலைக் கருத்திற் கொண்டு, உள்ளுர் அதிகாரிகள் இவ்விவகாரத்தை அவதானத்துடன் கையாண்டு வருகின்றனர் என்றார்.
