ராகமை – பொடிவிகும்புர பகுதியில் வலனா மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 375 லீற்றர் கசிப்புடன் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சுற்றிவளைப்பானது வலனா மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனை நடவடிக்கையின் போது 375 லிற்றர் கசிப்பு வலனா மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட நபர் 39 வயதுடைய ராகமை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ராகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
