முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 119 நாட்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சாலேவை தொடர்ந்து வைத்தியசாலையில் வைத்திருக்க வேண்டிய மருத்துவத் தேவை இல்லை என 10 பேர் கொண்ட மருத்துவக் குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
இதையடுத்து, அவர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மீண்டும் CID காவலுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுரேஷ் சாலே CID காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
