நாட்டின் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நடவடிக்கையாக 23,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை தேசிய ஆசிரியர் சேவையில் இணைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு ஆனந்த கல்லூரியில் நடைபெற்ற தேசிய ஆசிரியர் மற்றும் அதிபர் பாராட்டு விழாவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக பட்டதாரிகள் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரர்களை முறையான அடிப்படையில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆசிரியர்களின் சம்பளம், தொழில்சார் உரிமைகள் மற்றும் சேவை தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறைக்கு ஏற்ப ஆசிரியர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
