சவுதி அரேபியாவுக்கும் யேமனில் செயல்படும் ஹூதி அமைப்பினருக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச எண்ணெய் சந்தையில் விலைகள் உயர்ந்துள்ளன.
யேமனில் இருந்து சவுதி அரேபியாவை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் மத்திய கிழக்கின் எண்ணெய் விநியோகம் தொடர்பான அச்சங்கள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதனுடன் அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்திப் பகுதிகளை நோக்கி புயல் நகர்ந்து வருவதும் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை அமெரிக்க கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 90 டொலருக்கும் அதிகமாகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 101 டொலருக்கும் அதிகமாகவும் பதிவாகியுள்ளது.
