Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியா மாநகர சபை தொடர்பான இறுதி தீர்ப்பு!

ஆனி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பிரதி , முதல்வர் தெரிவு தொடர்பில் ஆட்சேபனம் தெரிவித்து எதிரணியால் தொடரப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை நீக்கி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று (2) உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் அவரிடம் வினவிய போது,

வவுனியா மாநகர சபையின் முதல்வர் பிரதி முதல்வரின் செயற்பாடுகளுக்கான தடை உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மாநகர சபையின் முதல்வர் சார்பில் நானும், பிரதி முதல்வர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் உயர்நீதிமன்றத்தில் குறித்த தடைக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்திருந்தோம்.

இன்று (2) உயர்நீதிமன்றத்தில் குறித்த வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் முதல்வர் தலைமையிலான மாநகர சபை இயங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி இடைக்கால தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை முதல்வர் தலைமையில் சபை இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதி முதல்வர் தொடர்பான இடைக்கால தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது.

எனினும் பிரதி முதல்வர் ராஜினாமா கடிதத்தை வழங்கினால் அதனை ஏற்றுக் கொள்வதற்கான அனுமதியும் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் எதிர்வரும் 19ஆம் திகதி மாநகர சபை தொடர்பான இறுதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்புள்ளையில் காலாவதியான குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற வர்தகருக்கு அபராதம்!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோதரையில் உள்நாட்டு துப்பாக்கிகள் 2 மீட்பு!

ஆடி 4, 2026
இலங்கை

துப்பாக்கி மிரட்டல் விடுத்ததற்காக யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட என்புக்கூடு மீட்பு

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube