ஈரானுடனான நீடித்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டல் திறனை கணிசமாகக் குறைக்க வேண்டும் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை ஏற்படுத்துவதற்கு, அணுசக்தி செறிவூட்டல் தொடர்பில் குறிப்பிடத்தக்க குறைப்பு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஈரானில் முடிவெடுக்கும் அதிகாரம் தற்போது யாரிடம் உள்ளது என்பது தொடர்பிலும் அமெரிக்க தரப்பில் கேள்விகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
