கச்சத்தீவு தொடர்பான 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட இலங்கை–இந்திய ஒப்பந்தங்களை மீண்டும் திறக்கும் எண்ணம் இந்திய அரசாங்கத்துக்கு இல்லை என இந்திய உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டமா அதிபர் ஆர். வெங்கடரமணி, இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர வழிமுறைகள் மூலம் கையாளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியமும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தங்களின் சட்டபூர்வத்தன்மையை நீதிமன்றம் இந்த விசாரணையின் போது இறுதியாக தீர்மானிக்கவில்லை. வழக்கு மீண்டும் 2027 பெப்ரவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
