சவுதி அரேபியாவின் அப்ஹா மற்றும் ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல்களில் மூவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யேமனில் செயற்படும் ஹூதி அமைப்பு இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், சவுதி தலைமையிலான படைகள் ரியாத் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான நிலை தொடரும் நிலையில், சவுதி விமான நிலையங்கள் மீதான இந்த தாக்குதல் பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
