கெஸ்பேவ–கொழும்பு வீதியின் மிரிஸ்வத்த பகுதியில், மெட்ரோ பேருந்து மீது வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் தனியார் சொகுசுப் பேருந்தின் 44 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கஹதுடுவையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மெட்ரோ பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோது இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் மெட்ரோ பேருந்தின் பின்பார்வைக் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதுடன், சுமார் 342,000 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சாரதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
