டெல்லியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்புகளைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருந்த 214 பயணிகள் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு ரயில்வே வெளியிட்ட தகவலின்படி, டெல்லி பகுதியில் ரயில் போக்குவரத்து நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து இந்தச் சேவைகள் மீளத் தொடங்கப்பட்டுள்ளன.
எனினும், ஒக்டோபர் 11ஆம் திகதி 30 ரயில் சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயிலில் புறப்படுவதற்கு முன்னர் தங்களது ரயிலின் தற்போதைய நிலையை அதிகாரப்பூர்வ ரயில்வே தளத்தில் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
