கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ XIV-க்கு நுரையீரலில் கண்டறியப்பட்ட முடிச்சை அகற்றுவதற்காக எதிர்வரும் நாட்களில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
71 வயதான போப்பின் நுரையீரலில் கண்டறியப்பட்டுள்ள அந்த முடிச்சின் தன்மை குறித்து மேலதிக மருத்துவ விபரங்கள் வெளியாகவில்லை. அது புற்றுநோயா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை.
போப்பின் உடல்நிலை மற்றும் சிகிச்சை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வத்திக்கான் தரப்பிலிருந்து வெளியாகும் நிலையில், உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் அவரது உடல்நலம் குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர்.
