இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஒக்டோபர் 14) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகக்கூடிய குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கத்தால், நாட்டிலும் அதைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் அடுத்த சில நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 100–150 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களிலிருந்தும் காற்றினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
