கொழும்பு, பம்பலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள கட்டடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்தில் இதுவரை எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
