Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

5 கோடி 10 இலட்சம் ரூபா பெறுமதியான ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் தாய்லாந்து நாட்டை சேர்ந்த மூவர் கைது

அக்டோபர் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சுமார் 5 கோடி 10 இலட்சம் ரூபா பெறுமதியான ‘ஹஷீஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு செல்ல முயன்ற வெளிநாட்டுப் பயணிகள் மூவர் விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தை சேர்ந்த 22 வயதுடைய இருவரும், 33 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் இன்றைய தினம் அதிகாலை 12:30 மணிக்குத் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த 03 பயணப் பைகளில், ஒப்பனைப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் 05 கிலோகிராம் 96 கிராம் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மூவரும் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பூட்டானை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி அமரசூரிய

செப்டம்பர் 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!

மே 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலை குறைக்கப்பட்டது

ஆகஸ்ட் 31, 2026
இலங்கை

மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு அவசியம் – ஜீவன் தொண்டமான்!

ஜூன் 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube