கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடும் எட்டப்படவில்லை.
கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு குறைந்தது ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்ததாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அதிருப்தியடைந்த தேரர்கள், ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் சாதகமான பதில் கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளனர். கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரையின் இறுதிக்கட்டமாகக் கொழும்பை வந்தடைந்த தேரர்கள், கடும் மழைக்கு மத்தியிலும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
