Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இறக்குவானையில் யானை தாக்கி பாகனும் உதவியாளரும் பலி!

ஆனி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இரத்தினபுரி – இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவிற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானையொன்று தாக்கியதில், அதன் பாகனும் அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பெரஹராவிற்காக இரண்டு யானைகள் அழைத்து வரப்பட்டு விகாரைக்கு அருகில் கட்டப்பட்டிருந்தன. இன்று (22) காலை இந்த யானைகளில் ஒன்றிற்கு தண்ணீர் புகட்டுவதற்காக பாகனின் உதவியாளர் யானையை இறக்குவானை ஆற்றை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது, திடீரென ஆவேசமடைந்த யானை உதவியாளரைத் தாக்கி, மிதித்துக் கொன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உதவியாளரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அவரை மீட்க அந்த இடத்திற்கு விரைந்த யானைப் பாகனையும் யானை கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதனால் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னர், யானை விகாரைக்கு அருகிலுள்ள வயல்வெளி ஒன்றிற்குள் சென்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். யானைக்கு மயக்க மருந்து செலுத்தி அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை (29) வெள்ளிக்கிழமை!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டு 14 வருடங்கள் – ரோஹன ஹெட்டியாராச்சி!

வைகாசி 6, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையை வந்தடைந்தது இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

மலைநாட்டில் அடைமழை – கண்டி விக்டோரியா நீர்த்தேக்கம் வற்றிய நிலையில் காட்சி!

வைகாசி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube