Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

சீகிரியா செல்ல அனுமதி மறுப்பு! ஆத்திரத்தில் அமெரிக்கர் செய்த கொடூரச் செயல்!

இலங்கை வந்த அமெரிக்கரின் அட்டகாசம்!

அக்டோபர் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சீகிரியா செல்ல அனுமதி மறுப்பு! ஆத்திரத்தில் அமெரிக்கர் செய்த கொடூரச் செயல்!

சீகிரியாவுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த 51 வயதான அமெரிக்கர், வீட்டு உரிமையாளரைக் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனுராதபுரத்தில் வீடொன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்த குறித்த அமெரிக்கப் பிரஜை, வீட்டு உரிமையாளரின் மகனுடன் சீகிரியாவுக்குச் செல்ல விரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இதற்கு வீட்டு உரிமையாளர் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர், வீட்டை விட்டு வெளியே சென்று மது அருந்திவிட்டு மீண்டும் திரும்பியுள்ளார்.

அதன்பின்னர், வீட்டில் இருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியதுடன், வீட்டு உரிமையாளரைக் கத்தியால் குத்தவும் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதன்போது இருவருக்கும் இடையில் அடிதடியும் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் அனுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த அமெரிக்கப் பிரஜை, சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

மாலைத்தீவு ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

மே 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

சீரற்ற காலநிலையினால் 27000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மே 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களின் அச்சிடல் இடைநிறுத்தம்

அக்டோபர் 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய காணொளி குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவு

ஆகஸ்ட் 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube