நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்தமுகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று (23) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 6,907 குடும்பங்களைச் சேர்ந்த 27,419 பேர் இந்த மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
6 மாவட்டங்களில் உள்ள 34 பிரதேச செயலகப் பிரிவுகள் இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.
அத்தோடு 02 வீடுகள் பேரிடரால் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், மேலும் 807 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
