Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ஆளில்லா விமானம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது

அக்டோபர் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ஆளில்லா விமானம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதன் முதல் பயணத் திகதி இம்மாத இறுதிக்குள் கொழும்பு துறைமுக நகரில் இடம்பெறவுள்ளதாகவும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதன் முதலாவது சோதனைப் பயணம் ஒக்டோபர் மாத இறுதிக்குள் கொழும்பு துறைமுக நகரில் நடைபெறவுள்ளது.

இரு பயணிகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஆளில்லா விமானம் , தொடர்ந்து சுமார் 30 நிமிடங்கள் வரை பறக்கும் வசதி கொண்டது.

சீன தொழில்நுட்ப நிறுவனமான ‘EHang’ அறிமுகப்படுத்திய ‘Global Fast Track Programme’ திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக இலங்கை திகழ்கிறது. இதன் மூலம் ஓட்டுநரற்ற மின்சார செங்குத்து ஏறுதல் மற்றும் இறங்குதல் (eVTOL) விமான சேவை சர்வதேச அளவில் விரைவுபடுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் முதன்மை செயல்பாட்டு மண்டலமாக கொழும்பு துறைமுக நகர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேவையான ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு ஒப்புதல்களுக்கு உட்பட்டு பயணிகள் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்படும்.

சிகிரியா மற்றும் பிதுரங்கலை மீதான இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாப் பறப்புகள், மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் கொழும்பில் உள்ள நட்சத்திர உணவகங்களுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, சுற்றுலாத் துறை மட்டுமின்றி, கடல்சார் தளவாடங்கள் (Maritime Logistics) உள்ளிட்ட பிற துறைகளிலும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

ஹட்டன் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு!

ஆகஸ்ட் 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐ.நா. 81ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க விஜித ஹேரத் நியூயோர்க் பயணம்

செப்டம்பர் 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு விஜயம்!

செப்டம்பர் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலைகளை மையமாகக் கொண்டு நாடளாவிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்!

ஜூன் 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube