Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அபராதம் செலுத்த முடியாமல் சிறைகளில் 1,454 கைதிகள் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

அக்டோபர் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் அபராதத் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தால் நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் 1,454 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Contents
சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கைஅபராதம் செலுத்த முடியாத கைதிகளின் எண்ணிக்கை

பாராளுமன்றத்தில் நேற்று  புதன்கிழமை (21) நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறைகளில் உள்ளவர்களை விடுவிப்பதற்கு தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, சிறு குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட அபராதங்களைச் செலுத்துவதன் மூலம் சில கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை

2026 ஆகஸ்ட் 12ஆம் திகதிய நிலவரப்படி, நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 10,611 கைதிகளும் 28,408 சந்தேகநபர்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

  • 20–30 வயது: 2,160 பேர்
  • 30–40 வயது: 3,423 பேர்
  • 40–50 வயது: 2,860 பேர்
  • 50–60 வயது: 1,561 பேர்
  • 60–70 வயது: 601 பேர்
  • 70–80 வயது: 150 பேர்
  • 80 வயதுக்கு மேல்: 11 பேர்

அபராதம் செலுத்த முடியாத கைதிகளின் எண்ணிக்கை

அபராதத் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தால் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,454 கைதிகளின் அபராதத் தொகை தொடர்பான விபரங்களையும் அமைச்சர் வெளியிட்டார்.

  • 10,000–15,000 ரூபாய்: 421 பேர்
  • 15,000–25,000 ரூபாய்: 220 பேர்
  • 25,000–50,000 ரூபாய்: 361 பேர்
  • 50,000–100,000 ரூபாய்: 245 பேர்
  • 100,000 ரூபாய்க்கும் மேல்: 207 பேர்

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் இந்தியாவுக்கு விஜயம்

ஜூலை 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரர் விவகாரம்: ஜனாதிபதியுடன் கலந்துரையாட மகா சங்க சபை கோரிக்கை

அக்டோபர் 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ரியாத் விமான நிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் – 12 பேர் உயிரிழப்பு, 300க்கும் மேற்பட்டோர் காயம்

அக்டோபர் 11, 2026
இந்தியாஇலங்கைவிளையாட்டு

ஓகஸ்டில் இலங்கை வருகிறது இந்திய கிரிக்கெட் அணி!

ஜூலை 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube