பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இன்றைய (22) போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்துள்ளது. இதன்படி, இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன.
