Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஜோர்டானில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – 7 பேர் உயிரிழப்பு, 34 பேர் காயம்!

அக்டோபர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஜோர்டானின் தெற்குப் பகுதியில் உள்ள கரக் (Karak) மாகாணத்தில் தேவாலயமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமூத் கிராமத்தில் அமைந்துள்ள கிரேக்க மரபுவழி தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை (23) இறுதிச் சடங்கு நிகழ்வொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

வாகனமொன்றில் வந்த துப்பாக்கிதாரிகள் தேவாலயத்திற்கு அருகில் இறங்கி, அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜோர்டானின் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாதுகாப்புக் கண்காணிப்பு காட்சிகளில், துப்பாக்கிதாரிகள் தேவாலயத்திற்கு அருகில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் மற்றும் அதில் ஈடுபட்டவர்களின் அடையாளம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானில் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானம்

ஆகஸ்ட் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

12 வயது சிறுமியல் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 81 வயது முதியவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை

ஆகஸ்ட் 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக செய்தி நிறுவனங்கள் சட்டப் போராட்டம்!

செப்டம்பர் 22, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை மீனவர் ஒருவர் தமிழகத்தில் கைது!

ஏப்ரல் 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube