Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

அக்டோபர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை நேற்று (24) பிற்பகல் 4 மணி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) பிற்பகல் 4 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:

கேகாலை மாவட்டம்: மாவனல்லை, தெரணியகல, ருவான்வெல்ல, தெஹிஓவிட்ட, அரநாயக்க மற்றும் யட்டியாந்தோட்டை.

நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ மற்றும் நோர்வூட்.

இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எலபாத்த.

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழைவீழ்ச்சி நிலவரம் குறித்து அவதானமாக இருக்குமாறும், மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் அல்லது மின்கம்பங்கள் சாய்தல், மண் தாழிறங்குதல் மற்றும் திடீரென நீரூற்றுகள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றைப் புறக்கணிக்க வேண்டாம். ஆபத்து ஏற்பட்டால் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊஞ்சல் தடி முறிந்து விழுந்தில் தாயுடனிருந்த 5 மாதக் குழந்தை பலி!

ஜூலை 28, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை சூடு பிடித்தது: கைது அச்சத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய மூத்த DIG வருண ஜெயசுந்தர!

ஜூன் 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலயப் புட்டின் விலையை ரூ.150 ஆகக் குறைக்க கோரிக்கை

ஆகஸ்ட் 6, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

தோனி மைதானத்திற்குள் வரும்போது ஏற்படும் ஆரவாரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது – எரிக் சைமன்ஸ்

அக்டோபர் 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube