Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

பிரபல சமையல் காலை நிபுணர் பத்மஸ்ரீ செஃப் தாமு காலமானார்!

அக்டோபர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பிரபல சமையல் கலைஞரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான செஃப் தாமு(72) இன்று (25) ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது மறைவுக்கு சமையல் கலைஞர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கே. தாமோதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட செஃப் தாமு, தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்று பிரபலமடைந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு, தொடர்ந்து 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 வகையான உணவுகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். மேலும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் கலைஞர் என்ற பெருமையையும் பெற்றார்.

சமையல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, இந்திய மத்திய அரசு 2025ஆம் ஆண்டு அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது. தமிழ் சமையல் கலையைப் பிரபலப்படுத்துவதிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

செஃப் தாமுவின் மறைவு இந்திய சமையல் துறைக்கும், அவரை நேசித்த ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக அமைந்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க பெண்ணிய செயற்பாட்டாளர் குளோரியா ஸ்டெய்னம் காலமானார்

செப்டம்பர் 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை முதற்கட்ட திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

ஜூலை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக தபால் சேவைகளை வலுப்படுத்த உயர்மட்ட கலந்துரையாடல்!

ஆகஸ்ட் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

மே 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube