யாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில், காணிக்குள் மதுபானப் போத்தல்களைப் புதைத்து வைத்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பௌர்ணமி தினமான இன்று (25) பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, வீட்டின் பின்புறத்தில் குழி தோண்டி மதுபானப் போத்தல்களைப் புதைத்து வைத்து, விற்பனை செய்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது 187.5 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட 45 மதுபானப் போத்தல்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
