Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

களு கங்கையைச் சூழ்ந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

#களுகங்கை #வெள்ளஅபாயஎச்சரிக்கை #வெள்ளஅபாயம் #இரத்தினபுரி #களுத்துறை #சீரற்றவானிலை #நீர்ப்பாசனதிணைக்களம் #இலங்கைசெய்திகள் #அவசரஎச்சரிக்கை #KaluGanga #FloodWarning #SriLankaNews #WeatherAlert #BreakingNews

அக்டோபர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நீர்ப்பாசனத் திணைக்களம், களு கங்கையின் நீர்மட்டம் மற்றும் நிலவும் வானிலை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுளை, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் எலபாத ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரணை, தொடங்கொடை, மில்லனிய, புளத்சிங்ஹள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும், அந்தப் பகுதிகளினூடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நிலவும் வானிலை மாற்றங்கள் மற்றும் அதிகாரிகளால் வெளியிடப்படும் அனர்த்த எச்சரிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தலயில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து – 8 பேர் காயம்

செப்டம்பர் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்றினை நகர்த்த முற்பட்ட போது விபத்து

அக்டோபர் 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நெல் விலை விவகாரம்: அரசு தன்னை மௌனப்படுத்த முயற்சிப்பதாக சஜித் குற்றச்சாட்டு!

ஜூலை 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்துகொண்ட பெண்!

மே 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube