ஹட்டனில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்றினை வேறொரு இடத்துக்கு நகர்த்த முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த லொரியை நகர்த்த முற்பட்ட வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதன்போது குறித்த லொரி அருகிலிருந்த கடையொன்றின் படிக்கட்டுகள் மீது ஏறிச் சென்று, உயர் மின்னழுத்த மின்கம்பத் தூணில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. எனினும், லொரிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
