கிங் கங்கை ஆற்றின் நீரேந்துப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் ஆற்று நீர்மட்ட அளவீட்டு நிலையங்களில் பதிவான தரவுகள் மற்றும் தற்போதைய மழைவீழ்ச்சி நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தவலம, நாகொட, பத்தேகம மற்றும் வெலிவிட்டிய–திவித்துர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட கிங் கங்கை பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதிகளூடாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
