சர்வதேச காவல் துறையான இன்டர்போலின் (Interpol) சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்த ‘அச்சினி’ என அழைக்கப்படும் அனுஷா லக்மாலி, ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘கஜ்ஜா’ என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில், அனுஷா லக்மாலி பிரதான சந்தேகநபராகத் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
