இரத்தினபுரி நகரின் பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய தகவல்களின்படி, இரத்தினபுரி – கொழும்பு வீதியைத் தவிர ஏனைய வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்ளும்போது அவதானமாக இருக்குமாறும், வெள்ள நீர் தேங்கியுள்ள வீதிகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
