சப்ரகமுவ மாகாணத்தில் நிலவும் வெள்ள நிலைமை காரணமாக, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி வழங்கப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாகப் பரீட்சைக்குத் தோற்ற முடியாத மாணவர்கள், நிலைமை சீரடைந்த பின்னர் தமக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை நிலையத்திற்குச் சென்று மாற்றுத் திகதி தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்கள் நிலைமை சீராகும் வரை அவதானத்துடன் செயற்படுவதுடன், தமது பரீட்சை நிலையத்துடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
