மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று (26) பெய்த பலத்த மழை காரணமாக, நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் நேற்று பிற்பகல் முதல் திறக்கப்பட்டுள்ளதாகப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்க அணைக்கட்டுக்குக் கீழ்ப்பகுதியில், கொத்மலை ஓயாவின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்போர் நீர்மட்ட உயர்வைக் கண்காணித்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
