இலங்கையின் ஜா-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்புவ பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில், 33 வயதுடைய உணவகப் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (27) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தம்புவ பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு வெளியில் இருந்து மதுபானங்களைக் கொண்டு வந்த நான்கு பேர், அங்கு அமர்ந்து மதுபானம் அருந்தியுள்ளனர்.
இதன்போது, JBL ஒலிபெருக்கி தொடர்பாக உணவக ஊழியர்களுக்கும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த குழுவினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் ஒருவர் கூரிய ஆயுதத்தால் உணவகப் பணியாளரின் மார்புப் பகுதியில் குத்தியுள்ளார்.
கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த பணியாளர் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 33 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கண்டறிவதற்கும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் ஜா-எல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன
