Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தந்தங்களுக்காக யானைகள் கொலை – 10 வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணை!

#யானைகள்_கொலை #தந்தங்களுக்காக_யானைகள்_வேட்டை #வனவிலங்கு_பாதுகாப்பு #யானைகள் #நீதிமன்ற_விசாரணை #அனுராதபுரம் #இலங்கை #ElephantKilling #WildlifeProtection #SriLankaNews #TamilNews

அக்டோபர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யானைகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவங்கள் தொடர்பான 10 வழக்குகள் அனுராதபுரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களில் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

பரண, ரேவத, சுமேத மற்றும் தீகதந்து ஆகிய தந்தங்களைக் கொண்ட யானைகள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பான நான்கு வழக்குகள் கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளால் ‘டொலர் மெஷின்’ என அழைக்கப்பட்ட யுனிகோர்ன் என்ற தந்தங்களைக் கொண்ட யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

அத்துடன், மற்றுமொரு யானையுடன் மோதலில் ஈடுபட்டு மயங்கி விழுந்த மகேஷாக்ய என்ற யானையின் தந்தங்கள் கோடரியால் வெட்டப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. தந்தங்கள் வெட்டப்பட்ட பின்னரே அந்த யானை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தீப்பந்தங்களால் சுட்டெரிக்கப்பட்டு காட்டு யானை ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு அனுராதபுரம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பத்திய என்ற தந்தங்களைக் கொண்ட யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு மஹவ நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

இதேவேளை, கல் கமுவே தலப்பூட்டுவா என அழைக்கப்பட்ட தந்தங்களைக் கொண்ட யானையின் மரணம் தொடர்பான வழக்கு குருநாகல் மாகாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காவந்திஸ்ஸ என்ற யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான இரண்டு வழக்குகள் கல் கமுவ மற்றும் மஹவ நீதவான் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உதவி இளைஞர் சேவைகள் அலுவலர் நேர்முகப் பரீட்சை ஜூலை 26 முதல்!

ஜூலை 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

”சுப்பிரமணியம்” நாயை தவறாக பயன்படுத்துவதாக முறைப்பாடு!

ஜூலை 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஜூலை 24, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை உடையில் ஞானசார தேரர் – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்

அக்டோபர் 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube